challange
challange
challange

குழந்தைகளுக்கு பலப்பல ஊசிகள் போடுவதால் தொடர்ந்து அழுகையும் அசௌகரியமும் இருப்பதால் அன்னையர் தற்பொழுது அவர்கள் காம்பினேஷன் வேக்ஸினேஷன் (கூட்டுதடுப்பூசி) தேர்ந்தெடுக்க இயலும். இதனால் குழந்தைகளுக்கான வலியும் குறைகிறது; அதோடு (காம்பினேஷன் வேக்ஸினேஷன்) வெறும் 1 ஊசியில் கீழே குறிப்பிட்டுள்ள நோய்களில் 3 முதல் 6 வரை தடுக்கும் விதத்தில் பலவித விருப்பத்தேர்வுகளில் கிடைக்கிறது.

காம்பினேஷன் வேக்ஸினேஷன்
பற்றி ஒவ்வொரு அன்னையும்
தெரிந்து கொள்ள வேண்டியது என்ன

காம்பினேஷன் வேக்ஸினேஷன்என்றால்என்ன ?
காம்பினேஷன் வேக்ஸினேஷன் அளிக்கும் நன்மைகள் என்ன?
என் குழந்தைக்கு எப்போது காம்பினேஷன் வேக்ஸினேஷன் அளிக்க வேண்டும்?
கீழே குறிப்பிட்டுள்ள 6 நோய்களுக்காக எத்தனை வித்தியாசமான தடுப்பூசிகள் கிடைக்கின்றன?
தனித்தனியான தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் போது, கூட்டுத் தடுப்பூசியால் ஏதேனும் கூடுதல் பக்க விளைவுகள் ஏற்படுமா?

டிப்தீரியா

டிப்தீரியா என்றால் என்ன, அது என் குழந்தைக்கு எப்படி தொற்றும்?
டிப்தீரியா என்பது ஒரு தீவிரமான கிருமி தொற்று. இது பொதுவாக மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள சளிச்சவ்வுகளை பாதிக்கிறது. டிப்தீரியா கீழ்க்கண்டவை மூலம் பொதுவாக பரவுகிறது:

தொற்றுப்பாதிப்புள்ள ஒரு நபரின் இருமல் அல்லது தும்மல் மூலம் வெளிப்படும் திரவதுளிகள்

மாசுபட்ட சுய அல்லது வீட்டு உபயோக பொருட்கள்- டிப்தீரியா ஏற்படுத்தக் காரணமாக உள்ள கிருமிகள் இருக்கக்கூடிய ஒரு விளையாட்டுப் பொருளை தொடும்போது குழந்தைக்கு டிப்தீரியா ஏற்படலாம்.

என் குழந்தைக்கு டிப்தீரியா ஏற்பட்டு விட்டால் என்ன ஆகும்?
டிப்தீரியா அறிகுறிகளில் உட்பட்டவை பலவீனம், தொண்டைப் புண், காய்ச்சல் மற்றும் கழுத்தில் உள்ள சுரப்பிகளில் வீக்கம். தொண்டையில் அழற்சி உருவாகி அதன் காரணமாக சுவாசிப்பது அல்லது விழுங்குவது கடினமாகலாம். மேலும் இது சுவாச குழாயை அடைத்தல், இதயத்துக்கு சேதம், நரம்புகளில் சேதம், நுரையீரல் தொற்று, பக்கவாதம் என பல பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

டிப்தீரியாவில் இருந்து என் குழந்தையை நான் பாதுகாப்பது எப்படி?

டிப்தீரியா ஒரு தடுப்பூசி மூலம் தடுக்கப்படக் கூடியது. டிப்தீரியா தடுப்பூசி பொதுவாக டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமலுக்காக (பெர்ட்டுசிஸ்) செலுத்தப்படும் ஆன்டிஜென்கள் உடன் சேர்த்து அளிக்கப்படும். சிறு குழந்தை பருவத்தில் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் குழந்தைக்கான நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் கூட்டுத் தடுப்பூசிகளில் ஒன்றாகும்.

எந்த ஒரு நோயாளி நபரிடம் இருந்தும் குழந்தையை விலக்கி வைத்துக் கொள்வது உட்பட சுகாதாரமான முன்னெச்சரிக்கைகளை பின்பற்றுங்கள்.

திரும்பிச்செல்லு

பெர்ட்டுசிஸ்

பெர்ட்டுசிஸ் என்றால்என்ன, அது என் குழந்தைக்கு எப்படி ஏற்பட இயலும்?

பெர்ட்டுசிஸ் (கக்குவான் இருமல் என்றும் அறியப்படுகிறது) மிகத் தீவிரமாக தொற்றிக் கொள்ளும் சுவாச தொற்று நோய். இது மிகவும் தீவிரமானதாக இருக்கலாம், குறிப்பாக பிறந்த குழந்தைகளுக்கும் மற்றும் சிறு குழந்தைகளுக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது

தொற்று பாதிப்புள்ள திரவத் துளிகள் மூலம் காற்றில் பெர்ட்டுசிஸ் பரவுகிறது. எனவே, இருமும் அல்லது தும்மும் நபர்களிடம் இருந்து இது சுலபமாக பரவுகிறது அல்லது அந்த நோய் உள்ள நபரின் அருகில் இருந்தாலும் பரவலாம். பிறந்த குழந்தைகளுக்கு பெர்ட்டுசிஸ் தொற்றுப் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் அந்த குழந்தைகளின் தாய்கள்தான்.

என் குழந்தைக்கு பெர்ட்டுசிஸ் ஏற்பட்டால் என்ன ஆகும்?

பெர்ட்டுசிஸ் பாதிப்பு சில நேரங்களில் குழந்தைகளுக்கு மற்றும் 2 மாதங்களுக்கு குறைவான வயதுள்ள குழந்தைகளுக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அபாயத்தை ஏற்படுத்தலாம். சிறு குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு இது மிகவும் துன்பத்தை ஏற்படுத்துவதோடு, குழந்தைகளுக்கு சுவாசத் திணறல் காரணமாக சருமம் நீல நிறத்தில் மாறி விடலாம்.

எனது பச்சிளம் குழந்தையை பெர்ட்டுசிஸ்-ல் இருந்து பாதுகாக்க என்ன வழிகள் உள்ளன?

பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போடுவது மூலம் பெர்ட்டுசிஸ்-ஐ தடுக்க முடியும். மேலும் பச்சிளம் குழந்தைகளுக்கு பெர்ட்டுசிஸ் ஏற்படுவதைத் தடுக்க தாய்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு தயவுசெய்து உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.

திரும்பிச்செல்ல

டெட்டனஸ்

டெட்டனஸ் என்றால் என்ன, அது என் குழந்தைக்கு எப்படி ஏற்பட இயலும்?

குளோஸ்ட்ரிடியம் டெட்டானி என அழைக்கப்படும் ஒரு கிருமி காரணமாக ஏற்படக்கூடிய தீவிரமான, பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய நோய் டெட்டனஸ் ஆகும்.

பொதுவாக இது எலும்பு மற்றும் தசைகளில் விறைப்பு மற்றும் இழுப்புக்களை ஏற்படுத்துவதன் மூலம் அடையாளம் காணப்படுகிறது. பொதுவாக தசை விறைப்பு, தாடை (தாடை இறுக்கம்) மற்றும் கழுத்தில் காணப்படும் மற்றும் உடல் முழுவதும் இது பரவலாம்.

இந்த கிருமி துளிகள் பொதுவாக மண், தூசிகள் மற்றும் உரத்தில் காணப்படும். சருமத்தில் உள்ள வெடிப்புகளால் இது உடலில் புகுந்து விடுகிறது. பொதுவாக அசுத்தமான பொருட்கள் காரணமாக இவை சருமத்திலுள்ள வெட்டுக்காயங்கள் அல்லது இதர காயங்கள் மூலம் புகுந்து விடலாம்.

என் குழந்தைக்கு டெட்டனஸ் ஏற்பட்டால் என்ன ஆகும்?

பிறந்த சிறு குழந்தைகளுக்கு டெட்டனஸ் திரும்பிச்செல்ல, பச்சிளம் குழந்தை தாய்ப்பால் குடிக்க உதடுகளால் உறிஞ்ச இயலாது, தாய்ப்பால் குடிக்க இயலாமல் அதிகமாக அழுது கொண்டிருக்கும். இந்த நிலைக்குப் பின்னர் தசைப் பிடிப்புக்கள் ஏற்படும்.

பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு தாடைப் பிடிப்பு, தசைகளில் இறுக்கம் ஏற்படுத்தும் வலியுடன் வலிப்புக்கள் ஏற்பட இது காரணமாகலாம். இதனால் எலும்புகள் உடைதல், சுவாசிப்பதில் கஷ்டம், குரல் நாண்களில் இழுப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

டெட்டனஸ் தாக்காமல் என் பச்சிளம் குழந்தையை நான் பாதுகாக்க வழிகள் என்ன?

CDC இதற்காக தடுப்பூசியை பரிந்துரைக்கிறது மற்றும் காயத்துக்கான நல்ல பராமரிப்பு டெட்டனஸ் தொற்றுப் பாதிப்பை தடுக்க உதவும். மேலும் மருத்துவர்கள், யாருக்கேனும் தீவிரமாக காயம் ஏற்பட்டால் மற்றும் டெட்டனஸ் வேக்ஸின்களால் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்றால் டெட்டனஸ்-ஐ தடுக்க உதவும் மருந்தையும் பயன்படுத்தலாம்.

திரும்பிச்செல்ல

போலியோ

போலியோ என்றால் என்ன அது என் குழந்தைக்கு எப்படி ஏற்பட இயலும்?

போலியோ ஒரு வைரஸ் காரணமாக ஏற்படும் அதிக தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகும் நோய். இது நரம்பு மண்டலத்தை பாதித்து அதன் காரணமாக பக்கவாதம், சுவாசிப்பதில் கஷ்டம் மற்றும் சில நேரங்களில் மரணத்தைக் கூட ஏற்படுத்துகிறது.5 வயதுக்கு கீழ்ப்பட்ட குழந்தைகளையே போலியோ முக்கியமாக தாக்குகிறது என்பதோடு இது தீவிரமான தொற்று நோய் ஆகும்.

இது ஒருவரின் மலத்திலுள்ள கிருமிகள் மற்றொருவரின் வாயை அடைவதன் மூலம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு முக்கியமாக பரவுகிறது அல்லது பொதுவான ஒரு காரணம் (உதாரணமாக அசுத்தமான தண்ணீர் அல்லது உணவு) மூலமும் பரவலாம். மேலும் உங்கள் குழந்தை கிருமிகளால் மாசுபட்டபொம்மைகள் போன்ற ஏதேனும் பொருட்களை எடுத்து தன் வாயில் வைத்துக் கொண்டால் கூட உங்கள் குழந்தைக்கு இந்த தொற்றுப் பாதிப்பு ஏற்படலாம்.

என் குழந்தைக்கு போலியோ ஏற்பட்டால் நான் என்ன செய்ய வேண்டும்?

CDC-ன் கருத்துப்படி போலியோ வைரஸ் தொற்றுப் பாதிப்புள்ள 4 நபர்களில் சுமார் 1 நபருக்கு ஃப்ளூ போன்ற அறிகுறிகள் இருக்கலாம். இதனால் தொண்டை புண், காய்ச்சல், களைப்பு, குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று வலி ஏற்படலாம். மேலும் ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் உள்ள நோயாளிகளுக்கு மூளை மற்றும் தண்டுவடம் சம்பந்தப்பட்ட அறிகுறிகளும் ஏற்படலாம். பக்கவாதம் போலியோ உடன் சம்பந்தப்பட்ட மிகத்தீவிரமான அறிகுறி. இதனால் நிரந்தர உடல் செயல் இழப்பும் மற்றும் மரணமும் ஏற்படலாம்.

எனது பச்சிளம் குழந்தையை போலியோ தாக்காமல் பாதுகாக்க வழிகள் என்ன ?

போலியோவை தடுக்க ஆற்றல் மிக்க வழி தடுப்பூசி. போலியோவுக்கு எதிரான தடுப்பூசி பற்றி கூடுதல் தகவல்களை உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

திரும்பிச்செல்ல

ஹீமோபிளஸ் இன்ஃப்ளூயன்ஸா
டைப் b (Hib)

ஹீமோபிளஸ் இன்ஃப்ளூன்யஸா டைப் b என்பது என்ன, என் குழந்தைக்கு இது எப்படி ஏற்பட இயலும்?

ஹீமோபிளஸ் இன்ஃப்ளூயன்ஸா நோய் எச். இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஒரு கிருமி காரணமாக ஏற்படுகிறது.

இதன் பெயருக்கு மாறாக, எச். இன்ஃப்ளூயன்ஸா இன்ஃப்ளூயன்ஸா (ஃப்ளூ)17 ஏற்படக் காரணமாகாது. ஹீமோபிளஸ் இன்ஃப்ளூன்யஸா டைப் b (Hib) மிதமான காது தொற்று பாதிப்புகள் முதல் தீவிரமான நிமோனியா, மெனின்ஜைடிஸ் மற்றும் 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு குறிப்பாக கிட்டத்தட்ட இதர இன்வேசிவ் நோய்கள் உட்பட பலவிதமான தொற்றுப் பாதிப்புகளுக்கு காரணம் ஆகலாம்.

பிறருடன் நெருக்கமாக இருக்கும்போது அவர்கள் இருமல் அல்லது தும்மலால் Hib உட்பட எச். இன்ஃப்ளூயன்ஸா நோய் பரவலாம். உடல் நலமின்மை காணப்படாதவர்களிடத்தில் கூட அவர்களின் மூக்கில் அல்லது தொண்டையில் இந்த கிருமி தங்கி இருப்பதால் கிருமியை பரப்ப முடியும்.

என் குழந்தைக்கு Hib ஏற்பட்டால் என்ன ஆகும்?

Hib காரணமாக ஏற்படக்கூடிய மிக பொதுவான நோய்களில் நிமோனியா, இரத்த ஓட்ட தொற்று மற்றும் மெனின்ஜைடிஸ் உட்பட்டவை. மெனின்ஜைடிஸ் மூளை மற்றும் தண்டுவடத்தை பாதிக்கும் தொற்று பாதிப்பு நோய். இது ஆரம்பத்தில் அதிக காய்ச்சல், தலைவலி, குறைவாக சாப்பிடுதல் மற்றும் குடித்தல் அறிகுறிகளுடன் காணப்படுகிறது.

CDC–¬யின் கருத்துபடி Hib இன்வேசிவ் நோய் கொண்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு மருத்துவமனையில் பராமரிப்பு தேவை. சிகிச்சை அளித்தாலும் கூட 20 குழந்தைகளில் 1 குழந்தை இறந்துவிட வாய்ப்புண்டு. Hib மெனின்ஜைடிஸ் தாக்கி தப்பிப் பிழைத்த குழந்தைகளில் 5ல் 1 குழந்தைக்கு மூளை சேதம் ஏற்படலாம் அல்லது செவிட்டு தன்மை ஏற்படலாம்.

Hib தாக்காமல் எனது பச்சிளம் குழந்தையை பாதுகாக்க வழிகள் என்ன?

தீவிரமான Hib நோயை தடுப்பதற்காக ஒரே ஒரு பொதுவான ஆரோக்கிய கருவியாக உலக சுகாதாரக் கழகம் தடுப்பூசியை பரிந்துரைக்கிறது. Hib தடுப்பூசிகள் பாதுகாப்பானவையாக மற்றும் சிறு குழந்தை பருவத்தில் செலுத்தப்படும்போது மிகவும் ஆற்றல் மிக்கவையாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

திரும்பிச்செல்ல

ஹெபாடைடிஸ் B

ஹெபாடைடிஸ் B என்றால் என்ன மற்றும் அது எப்படி என் குழந்தைக்கு ஏற்பட இயலும்?

ஹெபாடைடிஸ் B இரத்தம் மற்றும் உடல் திரவம் மூலம் பரவக்கூடிய ஒரு வைரஸ் காரணமாக கல்லீரலில் ஏற்படும் தொற்று பாதிப்பு. குறுகிய கால நோய் முதல் தீவிரமான குழந்தைகளின் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் நோயாக ஹெபாடைடிஸ் B பலவிதமாக இருக்கலாம். மேலும் இது ஆண்டுகணக்கில் தொடர்ந்து நீடிக்கும் மற்றும் கல்லீரலில் தீவிரமான சேதத்தையும் நாளடைவில் ஏற்படுத்தி விடும்.

தொற்றுப் பாதிப்புள்ள ஒரு தாய் மூலம் குழந்தை பிறப்பின் போது அவளின் குழந்தைக்கு இந்த வைரஸ் பரவ இயலும்.தொற்று பாதிப்பு இல்லாத ஒரு நபருக்கு ஹெபாடைடிஸ் பி வைரஸ் உள்ள ஒரு நபரின் இரத்தம், விந்து அல்லது இதர உடல்திரவம் மூலம் ஹெபாடைடிஸ் B வைரஸ் பரவுகிறது.

என் குழந்தைக்கு ஹெபாடைடிஸ் B ஏற்பட்டு விட்டால் என்ன ஆகும்?

CDC-ன் கருத்துப்படி 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளில் சுமார் 30% -50% பேருக்கு தீவிர ஹெபாடைடிஸ் B அறிகுறிகள் இருக்கலாம். பொதுவாக அறிகுறிகள் இல்லாத, 5வயதுக்கு கீழ்பட்ட பெரும்பாலான குழந்தைகள் மற்றும் தீவிர ஆரோக்கியப் பிரச்சினைகள் அதாவது நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் உள்ள பிறருக்கு அறிகுறிகள் தோன்றுவதில்லை.

ஹெபாடைடிஸ் B-ன் அறிகுறிகள் களைப்பு, காய்ச்சல், பசி இழப்பு, குமட்டல் , சருமம் அல்லது கண்களில் மஞ்சளாகுதல், அடி வயிற்று வலி அல்லது சிறு நீர் கருமை நிறத்தில் வெளியேறுதல்.

தோராயமாக தொற்றுப் பாதிப்புகளில் உள்ள குழந்தைகளில் 90% (அதாவது 1வயதுக்கு குறைவான குழந்தைகள்) நாட்பட்ட தொற்றுப் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். குழந்தை வளரும் போது இந்த அபாயமும் அதிகரிக்கிறது. 1 முதல் 5 வயது வரை உள்ள தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ள குழந்தைகளில் தோராயமாக 25%-50% குழந்தைகளுக்கு நாள்பட்ட ஹெபாடைடிஸ் B ஏற்படுகின்றது.)

நாள்பட்ட ஹெபாடைடிஸ் B காரணமாக கல்லீரல் சேதம், கல்லீரல் நோய், கல்லீரல் புற்று நோய் மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.

எனது பச்சிளம் குழந்தையை ஹெபாடைடிஸ் B தாக்காமல் பாதுகாக்க வழிகள் என்ன ?

CDC-ன் கருத்துப்படி ஹெபாடைடிஸ் B-ஐ தடுப்பதற்கான மிகச்சிறந்த றந்த வழி தடுப்பூசி போட்டுக் கொள்வதே. முழு பாதுகாப்புக்காக தேவையான அத்தனை ஊசிகளையும் குழந்தைக்கு போட வேண்டும். இந்த நோய்க்கு எதிரான தடுப்பூசி பற்றி கூடுதல் தகவலுக்கு உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.

திரும்பிச்செல்ல
தடுப்பூசி பற்றிய அதிக தகவல்கள் உட்பட. இந்த நோய்களை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி முழுமையான தகவல் பெற தயவுசெய்து உங்கள் குழந்தை மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.